ஆண் நண்பருடன் சமந்தா வெளியிட்ட புகைப்படம்… வெளிநாட்டிற்கு சென்றும் இதை விடமாட்டேன்றாங்களே!

ஆண் நண்பருடன் சமந்தா வெளியிட்ட புகைப்படம்… வெளிநாட்டிற்கு சென்றும் இதை விடமாட்டேன்றாங்களே!

  • Cinema
  • August 22, 2023
  • No Comment
  • 44

நடிகை சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கிருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழந்தனர். இதன்பின், கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சமந்தா – நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.

விவாகரத்துக்கு பின் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்து, பழையபடி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.மயோசிடிஸ் என்ற தசையுருக்கி நோய்க்கு சிகிச்சையளித்து கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும், முழுமையான தீர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா, அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆண் நண்பருடன் சமந்தா
நடிகை சமந்தா சில மாதங்கள் நடிப்பிலிருந்து விலகி முழு ஓய்வு எடுக்க முடிவு செய்த சமந்தா, சில ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குஷி படத்தின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விஜய் தேவரகொண்டாவுடன் மேடையில் நடமாடினார்.

தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா, அங்கு ஜாலியாக ஊர் சுற்றி, நண்பர்களோடு அரட்டை அடித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களையும் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.அங்கு சென்றும் ஜிம்மில் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருகின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் இன்னும் விடவில்லையா? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 41-வது இந்திய தின அணிவகுப்பிலும் நடிகை சமந்தா கலந்துகொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply