மிகிந்தலை நாடகத்தில் நடித்த சஜித்! சாடுகிறார் பாலித

மிகிந்தலை நாடகத்தில் நடித்த சஜித்! சாடுகிறார் பாலித

  • local
  • August 7, 2023
  • No Comment
  • 33

மிகிந்தலையின் மின்சாரக் கட்டண நாடகத் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக எழுதியிருந்தால் அரச நாடக விழாவில் கூட விருதுகளை வென்றிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மிகிந்தலை விகாரையில் மின் துண்டிக்கப்பட்டதாக தேரர் கூறியவுடன், நாடகத்தின் அடுத்த காட்சி நடிகர் சஜித் பிரேமதாச உடனடியாக முன்னோக்கி பாய்ந்து மின் கட்டணத்தை செலுத்தும் காட்சி, பார்வையாளர்கள் நினைத்தபடியே அனைத்தும் நடந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

ஒரு நல்ல நாடகத்தின் அடுத்த காட்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்றும், ஆனால் “மிகிந்தலை வெளிச்சம்” நாடகத்தில் நடிகர் சஜித் பிரேமதாச வழமை போல் நன்றாக நடித்ததாக ஐ.தே.க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சஜித் பிரேமதாச
பௌத்த மதத்தை உயரத்திற்கு கொண்டு சென்ற மிகிந்தலை மகானின் பெயரை மந்தமான அரசியல் நாடகங்களில் பயன்படுத்த வேண்டாம் என தாம் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply