வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்: அதிகரிக்கும் குற்றச்செயல்கள்

வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்: அதிகரிக்கும் குற்றச்செயல்கள்

  • local
  • August 7, 2023
  • No Comment
  • 35

பல தாக்குதல்களுக்குப் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய யாழ்ப்பாண மருத்துவர் குறித்த தகவல்களை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு பொருளாதார நெருக்கடியே காரணம் என்றாலும், பொலிஸார் இந்த விடயத்தை குறைத்து மதிப்பிடுகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வைத்தியரின் குடும்பம் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சாவியை ஒப்படைத்த பின்னர் இந்த வாரம் வாடகை வீட்டை காலி செய்யும் நிலைக்கு நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை எட்டியுள்ளது.

இந்த வீடு மருத்துவ நிபுணரின் குடும்பத்திற்கு நீண்ட கால குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் ஆயுதமேந்திய சிலரால், சொத்துக்களும் வாகனங்களும் பலமுறை சேதப்படுத்தப்பட்டன.வீட்டின் உரிமையாளருக்கும் மற்றுமொருவருக்கும் இடையிலான குரோதமே இந்த தாக்குதல்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை
அத்துடன் வீட்டு உரிமையாளர் மரணமான நிலையில் அதற்கான உரிமைக் கோரலும் தீவிரமான நிலையிலேயே தாக்குதல்களும் அதிகரிக்கப்பட்டன.

எனினும் பல முறை முறைப்பாடு அளித்தும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் உரிமையாளரின் குடும்பம் பிரதேச செயலாளரிடம் சாவியை ஒப்படைக்க முடிவு செய்தது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்ததால், அவர்கள் அதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply