திருகோணமலை பௌத்த விகாரை நிர்மாணிப்பிற்கு ஆதரவாக களத்தில் குதித்த அருட்தந்தை ஜோர்ஜ்

திருகோணமலை பௌத்த விகாரை நிர்மாணிப்பிற்கு ஆதரவாக களத்தில் குதித்த அருட்தந்தை ஜோர்ஜ்

  • local
  • August 29, 2023
  • No Comment
  • 19

தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்து இந்த திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வந்த சமாதானத்தை பறிப்பதற்கு மேற்கொண்ட முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாக அருட்தந்தை ஜோர்ஜ் திசாநாயக்க காட்டமாக தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயத் திற்கு ஆதரவாக இவ்வாறு அருட்தந்தை கருத்தை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தடையுத்தரவை பிறப்பித்து திருகோணமலை மாவட்டத்தில் இருந்த சமாதானத்தை அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு எமது கடும் எதிர்ப்பினை நாம் தெரிவிக்கின்றோம்.இந்த திருகோணமலை மாவட்டத்தில் தேரர்கள் உயிர்த்தியாகம் செய்து அந்த யுத்தகாலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த நிலையில் அவர்களுடைய உடம்பில் இன்னும் துப்பாக்கி காயங்கள் கூட உள்ளது.

இந்த நிலையில் அவர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்க இந்த இடத்திற்கு தேரர்கள் வந்தமை பெரு மகிழ்ச்சி என்பதை தெரிவிப்பதோடு எனக்கும் ஒரு கடமை உள்ளது. குருசகந்த ஆர்ப்பாட்டத்தின் போது எமக்கு தேரர்கள் மாத்திரம் தான் அவர்களுடைய ஆதரவை வழங்கினார்கள்.

அதனால் நான் என்னுடைய ஆதரவை இன்று அவர்களுக்கு வழங்குகின்றேன். யார் என்ன சொன்னாலும் என்ன நிலையில் இருந்தாலும், எனக்கென்று ஒரு கருத்து உள்ளது.

40 வருடங்கள் திருகோணமலையில் வாழ்ந்தவனாக, மத தலைவராக 30 வருடங்கள் திருகோணமலையில் சமாதானத்திற்காக சேவை செய்த நாங்கள் தொடந்தும் இதே போன்று செயற்படுவோம் என்பதை கூறிக்கொள்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply