வீட்டிலேயே மயோனீஸ் செய்வது எப்படி?

வீட்டிலேயே மயோனீஸ் செய்வது எப்படி?

பர்கர், பீசா, சாண்ட்விச், சாலட் போன்ற ரெசிபிகளில் சேர்க்கப்படும் மயோனைஸை நாம் எப்போதும் கடைகளில் தான் வாங்கிக்கொள்கின்றோம்.

அதை வைத்து எந்த உணவை செய்தாலும் வீட்டில் இருக்கும் சிறியவர்கள் விருப்பதுடன் எடுத்துக்கொள்வார்கள்.

ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டதாம். எனவே இது உடலில் கலோரி அளவை கண்ணுக்கே தெரியாமல் அதிகரித்து விடும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மயோனைஸ் எதிரி எனலாம்.

ஆகவே வீட்டில் இருக்கும் ஆரோக்கியமான பொருட்களை வைத்து எப்படி சுவையான மயோனைஸ் செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முட்டை-2

மிளகு-1 ஸ்பூன்

பூண்டு-4 பற்கள்

எண்ணெய் -6 -8 ஸ்பூன்

எலுமிச்சை-1/2 பழம்

சர்க்கரை-1 ஸ்பூன்

செய்முறை
ஒரு மிக்ஸியில் இரண்டு முட்டைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின் அதில் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து அரைத்து எடுத்த கலவையுடன் 4 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி, மீண்டும் அரைக்க வேண்டும்.

அரைத்து எடுத்த கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.

இறுதியாக அரைத்த பேஸ்ட்டில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் சுவையான மற்றும் ஆரோக்கியமான மயோனைஸ் செய்துக்கொள்ள முடியும்.

Related post

சில   நிமிடத்திலேயே இப்போ கேக் செய்யலாம்-Chocolate Mug Cake

சில நிமிடத்திலேயே இப்போ கேக் செய்யலாம்-Chocolate Mug Cake

பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று கேக். வீட்டிலேயே இலகுவாக செய்யக்கூடிய ஒரு ரெசிபியாக இருந்தது தான் மக் கேக். இதை சிறிய அளவில் செய்யலாம். மேலும் இதற்கு…
கற்றாழை பற்றிய நீங்கள் அறியாத சில உண்மைகள்!

கற்றாழை பற்றிய நீங்கள் அறியாத சில உண்மைகள்!

வீட்டில் கற்றாழை செட்டி கட்டாயமாக எல்லாரும் வளர்ப்பார்கள். மேலும் இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. கற்றாழையானது பொதுவாக வறண்ட காலநிலையில் தண்டு இல்லாமல் வளரும். இது இரண்டு…
இயற்கை முறையில் Hair Straightening Cream: தயாரிப்பது எப்படி?

இயற்கை முறையில் Hair Straightening Cream: தயாரிப்பது எப்படி?

பலரும் சுருள் முடி பிடிக்காமல் அழகு நிலையங்களுக்கு சென்று அளவிற்கு அதிகம் செலவு செய்து முடியை நேராக மாற்றிக்கொள்கிறார்கள். நமது இயற்கை தலைமுடியின் தோற்றத்தை மாற்றி அமைக்க ரசாயன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *