மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்: அதிகரிக்கும் வருமானம்

மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்: அதிகரிக்கும் வருமானம்

  • local
  • October 10, 2023
  • No Comment
  • 24

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சுற்றுலா வருமானம் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சென்ற ஆண்டின் (2022) இதே காலகட்டத்தை விட 67% உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதாந்திலும் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானம் எதிர்பார்த்த இலக்கை விட குறைவாக பதிவாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள்
அதிகளவு வருமானத்தை ஈட்டிய மாதமாக ஜூலை மாதம் காணப்படுகிறது, 219 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

1.55 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை வரவழைத்து ஆண்டு இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானத்தை ஈட்டுவதை இலங்கை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

2023 இன் முதல் ஒன்பது மாதங்களில் 1.01 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply