வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள வாய்ப்பு

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள வாய்ப்பு

  • local
  • August 7, 2023
  • No Comment
  • 15

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார்.

பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு,11 வயதுடைய மினுலி சோஹன்சா என்ற இலங்கை சிறுமியே தெரிவாகியுள்ளார்.கடந்த ஜூலை மாதம் பிரித்தானியாவில் நடைபெற்ற ‘பிரிட்டிஷ் நசனல் சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ்’ போட்டியிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

தந்தையின் பயிற்சி

இந்த போட்டியில், பிரித்தானியாவின் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வீரராக மினுலி சோஹன்சா களமிறங்கியுள்ளார்.

 

லண்டனில் வசிக்கும் இவர் தனது தந்தையின் உத்வேகத்தால் ஜிம்னாஸ்டிக்ஸில் சிறந்து விளங்குவதாக தெரிவித்துள்ளார்.

இவரது தந்தை குணரத்ன பண்டார, இலங்கையில் உள்ள பல பாடசாலைகளில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராக பணியாற்றியதுடன் இலங்கையில் தேசிய மட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல தடகள வீரர்களையும் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தந்தையின் பயிற்சியில் ஜிம்னாஸ்டிக் செய்த மினுலி, தனது 6ஆவது வயதில் பிரித்தானிய பயிற்சியாளரிடம் பயிற்சி பெறத் தொடங்கியுள்ளார்.

சிறுமி மினுலியின் கனவு
மினுலி பிரித்தானிய தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.இதேவேளை சமீபத்தில் மினுலி ‘கிரேட் பிரிட்டன் ஜிம்னாஸ்டிக் நசனல்’ அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள Gutenberg cup international போட்டியில் முதல் முறையாக பிரித்தானிய தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கவுள்ளார்.

மேலும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதே சிறுமி மினுலியின் கனவு என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply