அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 120 கோடி ரூபாய் இழப்பு! கட்டாயமாக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 120 கோடி ரூபாய் இழப்பு! கட்டாயமாக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்

  • local
  • August 6, 2023
  • No Comment
  • 39

வருடாந்தம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வீதி விபத்துக்களினால் நூற்றி இருபது கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், ஒரு வருடத்தில் ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட பேருந்துகள் விபத்திற்குள்ளாகியுள்ளன.இவ்வாறு விபத்திற்குள்ளாகும் பேருந்துகளை சரிசெய்து, இயக்குவதற்கு சுமார் நாற்பத்தேழு கோடி ரூபாவும் , சட்டச் சிக்கல்களுக்கு எண்பது கோடி ரூபாய்களும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வீதி பாதுகாப்பு விபத்து தடுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சாரதிகளுக்கு விசேட பயிற்சி திட்டம்
இத்திட்டத்தின் பிரகாரம், மேல்மாகாண டிப்போக்களுடன் இணைக்கப்பட்டுள்ள அறுநூறு லங்காம சாரதிகள் பயிற்சித் திட்டத்திற்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேருந்து சாரதிகள் விபத்து பதிவு புத்தகத்தை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து குற்றங்களில் சிக்கிய சாரதிகளும் அந்தந்த பிழைகள் பற்றி புத்தகத்தில் குறிப்புகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் பதவி உயர்வுக்கான இந்த வேலைத்திட்டத்தின் மூலம் வாகன விபத்துக்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் லலித் டி அல்விஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply