தீவிரமடையும் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதல்: தொடரும் ஏவுகணை தாக்குதல்

தீவிரமடையும் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதல்: தொடரும் ஏவுகணை தாக்குதல்

  • world
  • August 14, 2023
  • No Comment
  • 21

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பிறந்து 23 நாட்களேயான குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு பதிலடியாக கெர்சனின் மேற்கு பகுதிகளை கடந்த நவம்பர் மாதம் மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், டினிப்ரோ ஆற்றின் கரைக்கு அப்பால் இருந்து அப்பகுதிகளை ரஷ்ய வீரர்கள் தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கெர்சனின் ஷிரோகா பால்கா கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் இகோர் கிளிமென்கோ தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பிறந்து 23 நாட்களேயான குழந்தை மற்றும் அவரது 12 வயது சகோதரர் மற்றும் அவரது பெற்றோர் என மொத்தம் 7 பேர் ரஷ்யாவின் இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

ஸ்டானிஸ்லாவ் அருகே உள்ள மற்றொரு கிராமத்திலும் ரஷ்யாவின் தாக்குதலால் 2 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தீவிரவாதிகள் கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அவர்கள் படைகள் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கிளிமென்கோ குறிப்பிட்டுள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply