நபரின் கொடூர செயல் – துண்டுகளாக வெட்டப்பட்ட உடற்பகுதிகள்

நபரின் கொடூர செயல் – துண்டுகளாக வெட்டப்பட்ட உடற்பகுதிகள்

  • local
  • August 23, 2023
  • No Comment
  • 51

அதுருகிரிய, சீலாலங்கார மாவத்தை பகுதியில் நபர் ஒருவரின் கை கால்களை வாளால் தனித்தனியாக வெட்டி எடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேகநபர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாள்
அத்துருகிரிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாரத பெர்னாண்டோவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹபரகட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வாள் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.டுபாயில் வாழும் ஹபரகட கசுன் என்ற போதைப்பொருள் வியாபாரியின் நண்பரின் மனைவியுடன் பாதிக்கப்பட்ட நபர் தொடர்பு வைத்திருந்ததால், அதற்கு பழிவாங்கும் விதமாக ஹபரகட கசுன் கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் குறித்த தகவல்
அதற்காக ஒரு கிராம் போதைப்பொருள் ஐஸ் மற்றும் நாற்பதாயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ஹோமாகம முல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் சந்தேக நபர் கூலி வேலையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply