இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

  • local
  • August 28, 2023
  • No Comment
  • 35

அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் (28) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதி வரை இடம்பெறாது எனவும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாடப்புத்தகங்கள் அச்சிடல்
மேலும், 2024 ஆம் ஆண்டிற்கு தேவையான பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.024 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக அச்சிடப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் துறைக்கான புத்தகங்கள் அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடை துணிகளையும் சீனாவிடம் கோரியுள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply