துணிவு இருந்தால் தேர்தலுக்கு வாருங்கள்! – ரணிலுக்கும் பஸிலுக்கும் சஜித் சவால்

துணிவு இருந்தால் தேர்தலுக்கு வாருங்கள்! – ரணிலுக்கும் பஸிலுக்கும் சஜித் சவால்

  • local
  • August 23, 2023
  • No Comment
  • 74

வாய்ச்சவடால் விட வேண்டாம் துணிவு இருந்தால் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்திக் காட்டுங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவுக்கும் சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

‘நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும்’ என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களையும் எந்நேரமும் எதிர்கொள்ள மொட்டுக் கட்சி தயாராகவுள்ளது என்று பஸில் ராஜபக்ச கூறியிருந்தார்.

மொட்டு அரசு கவிழ்வது உறுதி
மேற்படி இருவரினதும் கருத்துக்களுக்குச் சஜித் பிரேமதாஸ பதில் வழங்கும்போது,

“தேசிய ரீதியில் தேர்தல் ஒன்று நடந்தால் ரணில் – மொட்டு அரசு கவிழ்வது உறுதி. இதைச் சமாளிக்கவே ஜனாதிபதி ரணிலும், மொட்டுவின் உரிமையாளர் பஸிலும் வாய்ச்சவடால் விடுகின்றனர்.அவர்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவெனில், வாய்ச்சவடால் விட வேண்டாம்; துணிவு இருந்தால் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்திக் காட்டுங்கள். அந்தத் தேர்தலில் இவர்களின் முகத்திரை கிழியும். மக்களின் ஆணை எமக்குக் கிடைக்கும் என குறிப்பிட்டார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply