சந்திராயனுக்கு நிலவில் கிடைத்துள்ள புதிய தொடர்பு: இஸ்ரோ மற்றுமொரு சாதனை

சந்திராயனுக்கு நிலவில் கிடைத்துள்ள புதிய தொடர்பு: இஸ்ரோ மற்றுமொரு சாதனை

  • world
  • August 22, 2023
  • No Comment
  • 21

சந்திராயன் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சந்திராயன் 3 நிலவில் தென் துருவத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அத்துடன், சந்திராயன் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவு தொடர்பான புதிய படங்களை அனுப்பி உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப் படங்கள் மூலமாக தரையிறக்கும் சரியான பகுதியை விஞ்ஞானிகள் முடிவு செய்ய பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரயான் 2 ஆர்பிட்டர்

சந்திராயன் 2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திராயன் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திராயன் 2 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

எனினும், பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திராயன் 2 வெற்றிகரமாக நுழைந்த போது திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சந்திராயன் 2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது.குறித்த சந்திராயன் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ  (21.08.2023) தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்பு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவால், ஜூலை 14 ஆம் திகதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் – 3 ராக்கெட் மூலம் அனுப்பபட்ட சந்திராயன் – 3 விண்கலம் ( 23.08.2023) மாலை 6:04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.

23-64e3966cb525d

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply