சந்திராயனுக்கு நிலவில் கிடைத்துள்ள புதிய தொடர்பு: இஸ்ரோ மற்றுமொரு சாதனை
- world
- August 22, 2023
- No Comment
- 8
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
சந்திராயன் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சந்திராயன் 3 நிலவில் தென் துருவத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
அத்துடன், சந்திராயன் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவு தொடர்பான புதிய படங்களை அனுப்பி உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப் படங்கள் மூலமாக தரையிறக்கும் சரியான பகுதியை விஞ்ஞானிகள் முடிவு செய்ய பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்திராயன் 2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திராயன் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திராயன் 2 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது.
எனினும், பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திராயன் 2 வெற்றிகரமாக நுழைந்த போது திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சந்திராயன் 2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது.குறித்த சந்திராயன் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ (21.08.2023) தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவால், ஜூலை 14 ஆம் திகதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் – 3 ராக்கெட் மூலம் அனுப்பபட்ட சந்திராயன் – 3 விண்கலம் ( 23.08.2023) மாலை 6:04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021