Express Entry: 3,200 புலம்பெயர்வோருக்கு கனடா அழைப்பு

Express Entry: 3,200 புலம்பெயர்வோருக்கு கனடா அழைப்பு

  • local
  • September 21, 2023
  • No Comment
  • 75

கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் வாயிலாக 3,200 புலம்பெயர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மீண்டும் துவக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம்

எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்திற்கு சிறிது இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில், தற்போது, மீண்டும் அது துவக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இந்த கோடையில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் வாயிலாக புலம்பெயர்வோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றாலும், அவை எல்லாம் பல்வேறு பிரிவுகளுக்கென தனித்தனியாக நடத்தப்பட்டன.

உதாரணமாக, மருத்துவத்துறைக்கு தனியாக, போக்குவரத்துத் துறைக்குத் தனியாக, விவசாயத் துறைக்கு தனியாக என அழைப்புகள் விடுக்கப்பட்டன.

ஆனால், தற்போது மொத்தமாக அனைத்துத் துறையினருக்குமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் என்பது என்ன?

எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, சில பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களின் மூலம் கனடாவின் தொழிலாளர் காலியிடங்களை நிரப்புவதற்காக, கனேடிய நிரந்தர குடியிருப்பு விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்காக கனேடிய அரசு பயன்படுத்தும் ஒரு அமைப்பாகும்.

எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டமானது, விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்களை (profiles) தரவரிசைப்படுத்தும், Comprehensive Ranking System (CRS) என்னும் புள்ளிகள் அடிப்படையிலான ஒரு திட்டத்தைப் பயன்படுத்துகிறது.

அதிக புள்ளிகள் பெறுவோர், விண்ணப்பிப்பதற்கான அழைப்பு ஒன்றைப் பெறுவார்கள் (ITA). அதைத் தொடர்ந்து அவர்கள் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.

அதைத் தொடர்ந்து, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கைரேகை முதலான விடயங்களைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்வதுடன், நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யலாம், அல்லது, மேலதிக ஆவணங்களைக் கேட்கலாம்.

உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதென்றால், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அதை உறுதி செய்யும் விதத்தில் Confirmation of Permanent Residence (COPR) என்னும் ஆவணத்தை ஒன்றை உங்களுக்கு வழங்கும்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர வாழிட உரிம விண்ணப்பதாரர்கள் landing processஐ முடிக்கலாம். நீங்கள் கனடாவுக்கு வெளியில் இருந்தால்,

கனடாவில் குடியமர்வதற்கான முதல் படிகளைத் துவங்குவதற்காக, நுழைவுக்கு முந்தைய சேவைகளை ( pre-arrival services) துவக்கலாம்.

இம்முறை, Comprehensive Ranking System (CRS) என்னும் புள்ளிகள் அடிப்படையிலான திட்டத்துக்கான குறைந்தபட்ச புள்ளிகள் 531.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply