பிரித்தானியாவில் உணவு பொருட்களில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்

பிரித்தானியாவில் உணவு பொருட்களில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்

  • world
  • August 24, 2023
  • No Comment
  • 62

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, பிரித்தானிய பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வடக்கு அயர்லாந்தில், சில உணவுகளின் பாக்கெட்களில் ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஒக்டோபர் முதல், இப்படி ஒரு மாற்றம் பிரித்தானியா முழுவதுமே நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை 2025ஆம் ஆண்டிலிருந்து, வட அயர்லாந்துக்கு அனுப்பப்படும் மற்ற பொருட்களின் மீதும் இந்த லேபில் ஒட்டப்பட உள்ளது.

இந்த மாற்றம் வட அயர்லாந்துக்கான பிரெக்சிட் 2019 ஒப்பந்தங்களில் செய்யபடும் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.

பிரச்சினையும் தீர்வும்

பிரித்தானியாவின் மற்ற பகுதிகளுக்கும் வட அயர்லாந்துக்கும் இடையில் அமைந்துள்ள அயர்லாந்துக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகும்.

எனவே அயர்லாந்து வழியாக வட அயர்லாந்துக்குள் செல்வதும், ஐரோப்பிய ஒன்றியம் வழியாக வட அயர்லாந்து செல்வது போன்றது தான் என கூறப்படுகின்றது.ஆகவே, வட அயர்லாந்துக்குள் இறைச்சி, பால் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதில் அன்றாட பிரச்சினைகள் உருவாகின.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக வட அயர்லாந்துக்கு அனுப்பப்படும் இறைச்சி, பால் போன்ற பொருட்களில், ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட உள்ளது.

இதனால், ஆவண சரிபார்ப்பு முதலான விடயங்களுக்காக, தேவையற்ற கால தாமதம் தவிர்க்கப்படும் என்பதால், இந்த நடைமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply