புகலிடக்கோரிக்கையாளர்களை வைத்து பிரித்தானியா செய்யும் சதி

புகலிடக்கோரிக்கையாளர்களை வைத்து பிரித்தானியா செய்யும் சதி

  • world
  • August 23, 2023
  • No Comment
  • 17

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்ப பிரித்தானியா முயன்று வருகின்றது.

ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவது சட்டவிரோதம், அது பாதுகாப்பான மூன்றாவது நாடு அல்ல என தீர்ப்பளித்துவிட்டார்கள். பிரித்தானிய அரசு ருவாண்டாவை பாதுகாப்பான நாடு என்கிறது.

இதேவேளை ருவாண்டா நாட்டவர்களுக்கு பிரித்தானிய புகலிடம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.இந்நிலையில் பிரித்தானிய அரசு கூறுவதுபோல் ருவாண்டா பாதுகாப்பான நாடாக இருக்குமானால், அந்த நாட்டவர்கள் ஏன் பிரித்தானியாவில் புகலிடம் கோர வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை
2020ஆம் ஆண்டிலிருந்து, பிரித்தானியா சுமார் 40 ருவாண்டா நாட்டவர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ளமை அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

2011க்கும் 2021க்கும் இடையில், தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறி புகலிடம் கோரிய 37 ருவாண்டா நாட்டவர்களுக்கு பிரித்தானியா புகலிடம் வழங்கியுள்ளது.ருவாண்டா பாதுகாப்பான நாடு என பிரித்தானிய அரசு கூறுகிறது. ஆனால், பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்பதை அங்கீகரித்துள்ளது.

அப்படியானால், ருவாண்டா நாட்டவர்களுக்கே ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்றால், மற்ற நாட்டவர்களுக்கு மட்டும் அது எப்படி பாதுகாப்பான நாடாக இருக்கும் என்பது எனக்கு புரியவில்லை என புலம்பெயர்தல் நிபுணரும், Durham பல்கலைப் பேராசிரியருமான Thom Brooks கூறியுள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply