தன்னிச்சையாக செயற்படும் தோட்ட உரிமையாளர்கள்: உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் வலியுறுத்து

தன்னிச்சையாக செயற்படும் தோட்ட உரிமையாளர்கள்: உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் வலியுறுத்து

  • local
  • August 23, 2023
  • No Comment
  • 20

“தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார்கள். ஆகவே, இப்பிரச்சினைகள் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள்.” என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில்  (22.08.2023), மாத்தளை – ரத்வத்த தோட்டத்தில் தற்காலிக குடியிருப்பு ஒன்றை அந்தத் தோட்டத்தின் உதவி முகாமையாளர் பலவந்தமான முறையில் அகற்றிய சம்பவம் தொடர்பில் விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரமேஷ் பத்திரண விசேட உரையாற்றினார்.தன்னிச்சையான தோட்ட உரிமையாளர்கள்
அமைச்சரின் உரையைத் தொடர்ந்து சபாநாயகர் மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்தார். சபாநாயகர் மேலும் தெரிவித்ததாவது,

“இவ்வாறான பிரச்சினைகள் எமது மாவட்டத்திலும் (மாத்தறை) இடம்பெறுகின்றன. தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையான முறையில் செயற்படுகின்றார்கள்.

அவர்கள் தோட்ட மக்களை வாழ விடுவதில்லை. மின்சாரம், நீர் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஆகவே, எமது மாவட்டத்தில் உள்ள தோட்டப்புற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள்.” என தெரிவித்துள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply