சிறைச்சாலை அதிகாரி மீது 05 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

சிறைச்சாலை அதிகாரி மீது 05 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

  • local
  • August 7, 2023
  • No Comment
  • 75

மாத்தறை – வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி நேற்று (05.08.2023) மாலை தனது கடமையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,அதிகாரி வீடு நோக்கி பேருந்தில் பயணித்த போது அதில் ஏறிய 05 பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கியுள்ளது.

மேலதிக விசாரணை
தாக்குதலினால் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி நேற்று முன்தினம் (04.08.2023) மாத்தறை சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் பெற்று காலி சிறைச்சாலைக்கு கடமைக்காக நேற்றைய தினமே (05.08.2023) சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply