யானை தாக்கி குடும்பஸ்தர் பலி மற்றுமொருவர் காயம்

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி மற்றுமொருவர் காயம்

  • local
  • August 7, 2023
  • No Comment
  • 55

மயிலவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று (06.08.2023) மாலை 3.00 மணியளவில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதில் பக்மீகம -அடம்பன பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.சந்ரதாஷ (41வயது) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி
இதேவேளை குறித்த நபருடன் பயணித்த அதே பகுதியைச் சேர்ந்த கே.பியசாந்த பண்டா (37வயது) என்பவர் காயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்திலேயே இருப்பதாகவும், சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி வருகை தரவுள்ளார் எனவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply