G 20 உச்சி மாநாடு பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

G 20 உச்சி மாநாடு பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

  • world
  • September 8, 2023
  • No Comment
  • 50

இந்திய தலைநகர் புதுடெல்லியில், இந்த வார இறுதியில், அதாவது செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் G 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

G 20 என்றால் என்ன?

G 20 என்பது The Group of 20 என்பதன் சுருக்கமேயாகும். அந்த அமைப்பின் கீழ் 19 நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தையும் சேர்த்தால் எண்ணிக்கை 20 ஆகிறது.

அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த‌ பொருளாதார கூட்ட‌மைப்பே G 20 ஆகும்.

உக்ரைனுக்கு அழைப்பு இல்லை

40 உலக நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. G 20 நாடுகளின் தலைவர்களுடன், சிறப்பு விருந்தினர்களாகவும் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

மாநாட்டில் உக்ரைன் ரஷ்யப் போர் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி மாநாட்டில் பங்கேற்கவில்லை. காரணம், உக்ரைன் G 20 நாடு அல்ல.

அத்துடன், ஜெலன்ஸ்கிக்கு சிறப்பு விருந்தினராகவும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் காரணம் என கூறப்படுகிறது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply