சவூதி- குவைத் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சவூதி- குவைத் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு இதயம் (Heart) இமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை  சவூதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளது.

அதன்படி குவைத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டு சிறை தண்டனையும், 2,000 தினார் (இலங்கை ரூபாவில் சுமார் 20 இலட்சம்) அபராதமும் விதிக்கப்படும்.இதே போன்று, சவூதியிலும் 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 இலட்சம் ரியால் ( இலங்கை ரூபாவில் சுமார் 84 இலட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதம் 

தொடர்ந்து இதனைச் செய்தால் அபராதம் 3 இலட்சம் ரியால் வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியே வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு இமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன.

சிறைத் தண்டனை

அதில் முக்கியமானது இதயம் இமோஜி. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த இமோஜியை பயன்படுத்துவதுண்டு.இந்த நிலையில், இந்த இதயம் இமோஜியை அறிமுகமில்லாத பெண்கள் அல்லது பாலியல் ரீதியான நோக்கில் வேறு ஒருவருகோ அனுப்பினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டம் ஒன்றை குவைத் அரசு இயற்றியுள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply