குருந்தூர் மலையை பாதுகாப்பது யார்..! ஜனாதிபதியின் திடீர் தீர்மானங்கள் குறித்து அநுர தகவல்

குருந்தூர் மலையை பாதுகாப்பது யார்..! ஜனாதிபதியின் திடீர் தீர்மானங்கள் குறித்து அநுர தகவல்

  • local
  • August 21, 2023
  • No Comment
  • 77

நாம் பொய்யான பிளவுகளுக்கு பதிலாக உண்மையான பிளவுகளை சமூகமயப்படுத்தல் வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.காலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“13 ஆம் திருத்தம் தொடர்பிலான கருத்தாடல்கள் எவ்வாறு உருவானது? மஹா விகாரையில் தேரவாதம் தொடர்பில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க ஜனாதிபதி திடீரென ஏன் சிந்திக்க வேண்டும்.

ஜனாதிபதியின் திடீர் தீர்மானங்கள்

குருந்தூர் மலையை பாதுகாப்பது யார்? சமூகத்தை பல பிரிவுகளாக பிரித்து பிளவுகளை ஏற்படுத்தி சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர். எனவே நாம் பொய்யான பிளவுகளுக்கு பதிலாக உண்மையான பிளவுகளை சமூகமயப்படுத்தல் வேண்டும்.தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டில் யுத்தம் இல்லாமல், பிளவுகள் இல்லாமல் ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது. மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளையும்,குரோதங்களையும் ஏற்படுத்தி நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயற்சி செய்யும் நாடகமாகும்.

அன்று எதிரிகள் என கூறியவர்கள் இன்று நண்பர்களாக மாறியுள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்கள் நாட்டின் ஆட்சி, அதிகாரங்கள் யாரிடம் இருந்தது. ராஜபக்ச மற்றும் ரணிலிடமே இருந்தது.

சமூகத்தை சிங்களம், தமிழ் என பல பிரிவுகளாக பிரித்தனர். அனைத்து தேர்தலின் போதும் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 17 ஆம் திகதி ஆகும் போது புலிகள் எழுந்து நிற்கவில்லை. 19 ஆம் திகதி ஆகும் போது ஆவா குழுக்கள் இல்லை.17 ஆம் திகதி எவ்வாறான விடயங்கள் வெளியில் வந்தன. மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் கொத்து. ஆடை மற்றும் மலட்டுத்தனத்தை ஏற்படுத்தும் வைத்தியர்கள் என வெளியில் வந்தனர். தற்போது மீண்டும் அதனை பரிசீலிக்கும் நிலைமை வெளியில் தெரிகின்றன.

கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களை சற்று சிந்தித்து பாருங்கள்.அனைத்தும் இயற்கையாக இடம்பெறும் சம்பவங்கள் என்று நினைக்க வேண்டாம்.

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் தொடர்பிலான கருத்தாடல்கள் எவ்வாறு உருவானது. அதற்கு நாம் இணங்க போவதில்லை என சாகார காரியவசம் கூறுகிறார். மீண்டும் அந்த பிளவை ஏற்படுத்த சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.

உண்மையான பிளவுகள்

குருந்தூர் மலையை பாதுகாப்பது யார்? இவ்வாறான பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் உண்மைகளை மறைத்து புதிதாக பிளவுகளை உருவாக்கினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அவர்களால் உருவாக்கப்பட்டதுஇருப்பினும் இரு தரப்பினர்களின் கணக்கிலக்கங்களுக்கு ஒரே தடவையில் பணம் செலுத்தப்பட்டமை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளியானது. அவர்களே அதனை உருவாக்கினர். உண்மையான பிளவுகளை மறைத்து பொய்யான பிளவுகளை வெளிப்படுத்துகின்றனர்.

நாடு வங்குரோத்து அடைந்து, நாட்டு மக்கள் துன்பத்தில் வாழும் போது அந்த மக்களுக்காக மனசாட்சிக்கு ஏற்ப உதவ முன்வருவதே உண்மையான பிரஜை ஒருவரின் கடமையாகும். எனினும் இன்றைய ஆட்சியாளர்களிடத்தில் அவ்வாறான பண்புகள் இல்லை. அவர்கள் உண்டு, குளித்து, மகிழ்கிறார்கள்.”என தெரிவித்துள்ளார்.

 

23-64e3322d9ec0e

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply