யாழில் இடம்பெற்ற போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்!

யாழில் இடம்பெற்ற போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்!

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 21

வடக்கு மாகாண ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டி நேற்றைய தினம் (09-08-2023) யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.குறித்த போட்டியில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் 2 தங்க பதக்கங்களும், 1 வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு நடேஜினி ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்திருந்தார்.வவுனியா பெரிய கோமரசங்குள மாணவிகள் இருவர் பங்குபற்றி 1 வெள்ளி பதக்கமும், 1 வெண்கலப் பதக்கமும்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அம்பிகா ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்திருந்தார்.இந்த வெற்றிக்கு ஞானகீதன் ஆசிரியர் இவர்களிற்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply