வட கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்: வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்

வட கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்: வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்

  • world
  • August 17, 2023
  • No Comment
  • 17

அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் வட கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்தபோது கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் குறித்து வட கொரிய அரசு தெரிவித்துள்ள விடயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Joint Security Area
வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள 250 கிலோமீற்றர் இடைவெளி, Joint Security Area என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா செல்ல அனுமதி உள்ளது. அந்த இடத்திலிருந்து இரு கொரியாக்களின் வீரர்களும் தங்கள் எல்லைகளை பாதுகாத்து நிற்பதைக் காணமுடியும்.இந்நிலையில், அந்த பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த அமெரிக்க ராணுவ வீரரான ட்ராவிஸ் கிங் ( Travis King, 23) என்பவர், அனுமதிக்கப்பட்ட பகுதியைத் தாண்டி வட கொரிய எல்லைக்குள் நுழைந்துள்ளார்.

அவரைக் கைது செய்து காவலில் அடைத்துள்ளனர் வட கொரிய அதிகாரிகள்.

வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்
இந்நிலையில், ட்ராவிஸ் அமெரிக்க ராணுவத்தில் மோசமாக நடத்தப்பட்டதாலும், இனரீதியாக பாரபட்சம் காட்டப்பட்டதாலுமே, வேண்டுமென்றே வட கொரியாவுக்குள் அவர் நுழைந்துள்ளதாக வட கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், வட கொரியா அல்லது ஒரு மூன்றாவது நாட்டில் அவர் புகலிடம் கோர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வட கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.ட்ராவிஸின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு எரிச்சலையூட்டியுள்ள நிலையில், அவருக்கு தண்டனையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஊதியம் பிடித்துவைக்கப்படுவதுடன், அவமானப்படுத்தப்பட்டு அவர் ராணுவத்திலிருந்து வெளியேற்றப்படலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக வட கொரியாவால் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர் ட்ராவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply