உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா

  • world
  • August 11, 2023
  • No Comment
  • 12

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் மீண்டும் இரு ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அவற்றில் ஒன்று நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள கலுகா பகுதியிலும், மற்றொரு ட்ரோன் மாஸ்கோவின் முக்கிய சுற்றுச் சாலைக்கு அருகிலும் அழிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தலைநகா் மாஸ்கோவின் புகா் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் நேற்றுமுன்தினம் (09.08.2023) வெடிவிபத்து ஏற்பட்டது.உக்ரைனுடன் நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக மாஸ்கோவில் அந்த நாடு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இராணுவத்துக்குத் தேவையான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இந்த விபத்தில் 45 போ் காயமடைந்தனா். தொழிற்சாலையில் வெடிபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கிடங்கில் இந்த விபத்து ஏற்பட்டது என்றாா் அவா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே அமைந்துள்ள 4 பிராந்தியங்களின் கணிசமான பகுதிகள் தற்போது ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ளன.

அந்தப் பகுதிகளை மீட்பதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் எதிா்த் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன், அவ்வப்போது ரஷ்ய எல்லைக்குள்ளும் தாக்குதல் நடத்தி வருகிறது

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *