இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

  • Sports
  • October 20, 2023
  • No Comment
  • 84

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன.

இந்த அழைப்பு இலங்கையின் தேசிய தேர்வாளர் குழுவால் விடுக்கப்பட்டுள்ளது.

பிரமோத் மதுஷனை அணிக்கு அழைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், துஷ்மந்த சமீரா முழுமையாக குணமடைந்துள்ளதால் அவரை அணிக்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தேர்வாளர் குழு தீர்மானித்திருந்தது.

மேலும், துஷ்மந்த சமீரா அனுபவமுள்ள பந்துவீச்சாளராக இருப்பதாலும் அவரை அணிக்கு அழைக்க தேர்வாளர் குழு தீர்மானித்திருந்தது.

மதீஷ பத்திரனவின் பந்துவீச்சுக் கையில் ஏற்பட்ட உபாதைக் காரணமாக 10 நாட்களுக்கும் அதிகமாக அவர் ஓய்வில் இருக்க வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

துஷ்மந்த சமீராவை மேலதிக வீரராக சேர்ப்பது 15 பேர் கொண்ட அணிக்குள் அவரை கொண்டு வர அணி நிர்வாகத்திற்கு வாய்ப்பளிக்கும்.

36 வயதான ஏஞ்சலோ மெத்யூஸை அணியில் இணைத்துக்கொள்ளும் திட்டம் முன்னதாக தேர்வாளர்களுக்கு இருக்கவில்லை.

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply