மாத்தறையில் இரு வீட்டுப்பணி பெண்கள் கொலை

மாத்தறையில் இரு வீட்டுப்பணி பெண்கள் கொலை

  • local
  • October 9, 2023
  • No Comment
  • 53

மாத்தறையில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றிய இரு பெண்கள் கொல்லப்பட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவர்கள் மலம்படை மற்றும் வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம் முறைப்பாட்டின் பிரகாரம் சனிக்கிழமை காலை வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேறி மாலையில் வீடு திரும்பிய போது வீட்டுப் பணிப்பெண்கள் இருவரையும் காணவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுப் பணிப்பெண்கள் வீட்டில் இல்லாததால் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்தமை தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பெண்கள்
67 மற்றும் 70 வயதுடைய இரு பெண்களும், பணிப்பெண்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிவறை பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அறை அலமாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கம்,12 வளையல்கள், 02 நெக்லஸ்கள், ஒரு தங்க கரண்டி, 39 வெளிநாட்டு நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் மாத்தறை, துடாவ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் வசம் இருந்த திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply