கடுவளை கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது

கடுவளை கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 42

கடுவளை 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் அடையாளம் தெரியாத சடலமொன்று காணப்படுவதாக கடுவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் மற்றும் உயிரிழந்த நபருக்கு இடையில் காணப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள், முல்லேரியா பகுதியில் வைத்து தாக்கி கொலை செய்து பின்னர் முச்சக்கர வண்டியில் கடுவளை 8 ஆம் கட்டை பகுதியில் சடலத்தை விட்டுச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வெல்லம்பிட்டி மற்றும் அங்கொடை பிரதேசங்களை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, வயர், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply