கிளிநொச்சியில் ஏழாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

கிளிநொச்சியில் ஏழாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 14

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு எதிரான மக்கள் போராட்டம்  07ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அனைத்து மக்கள் ஒன்றியத்தால் வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி ஆகிய கிராமங்கள் இணைந்து சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக நடாத்தும் சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டாத்தின் ஏழாவது நாள் போராட்டமானது வேரவில் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்று வருகிறது.

பொன்னாவெளி எனும் பழமைவாய்ந்த கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுண்ணக்ககல் அகழ்வை மேற்கொள்வதற்கு டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு பணிகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை
கடற்கரைக்கு அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 300 மீற்றர் வரையான ஆழத்தில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படும் போது அதன் விளைவாக தங்களது கிராமங்களுக்குள் கடல் நீர் உள்வரும் எனவும் அதனால் கிராம மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர்

அத்துடன் தொழிற்சாலைக் கழிவுகள் காரணமாக மோசமான நோய்த்தாக்கங்களுக்கும் பொதுமக்கள் முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கடற்கரையில் அமைந்துள்ள தங்களது கிராமங்களில் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply