நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த வீட்டு வாடகை 1000 ரூபா! வெளியானது கணக்காய்வு அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த வீட்டு வாடகை 1000 ரூபா! வெளியானது கணக்காய்வு அறிக்கை

  • local
  • August 28, 2023
  • No Comment
  • 33

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதிவெலவில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 30 வருடங்களாக மாதாந்த வீட்டு வாடகையாக 1000 ரூபா மாத்திரே அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.1993 ஆம் ஆண்டு முதல் குடியிருப்பின் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களுக்காக வைப்புத்தொகையாக அறவிடப்பட்ட ஆயிரம் ரூபா தொகை உரிய காலத்தில் திருத்தப்படவில்லை எனவும் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரொருவர் பதவி நீக்கப்பட்டவுடன் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை உடனடியாக காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்ற போதிலும், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்குள் 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி அபராதத் தொகையையும், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் உட்பட 455,904 ரூபாவையும் செலுத்தவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply