பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் திட்டம்

பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் திட்டம்

  • local
  • August 25, 2023
  • No Comment
  • 46

இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் 2025 ஆம் ஆண்டளவில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் சுமார் 312 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதி
இதேவேளை, தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண ஆணையம் இந்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என கணித்துள்ளது.

இதேவேளை, சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அவர் கவனம் செலுத்தியுள்ளார். நாட்டிற்குள் ஏலம் விடுவதன் மூலம் வெளிநாட்டு கொள்வனவு செய்பவர்கள் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

இதன்படி, வெளிநாட்டு கொள்வனவு செய்பவர்கள் இந்த நாட்டில் உள்ள ஏலங்களில் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என வும் தெரிவித்துள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply