சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள இலங்கை தமிழர்

  • world
  • October 18, 2023
  • No Comment
  • 34

சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான சந்தியாப்பிள்ளை கபிரியேல் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் மன்னார் மாவட்டம் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி சுவிஸ் நாட்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக இவர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் சுவிஸ் நாட்டில் 1989 ஆம் அண்டு முதல் 25 வருடங்கள் மனநல வைத்தியசாலையிலும், 8 வருடங்கள் எலும்பு முறிவு வைத்தியசாலையிலும் ஆண் தாதியாக கடமைபுரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்க அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக 1990 ஆம் அண்டு முதல் கடமை புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“இவர் சுவிஸ் நாட்டில் மன்னார் மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 7 கத்தோலிக்க ஆலயங்களில் 2019 ஆம் ஆண்டிலிருந்து திருப்பண்டப் பொறுப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

நகர சபை உறுப்பினராக 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அவர் தொடர்ந்து இருந்து வருகின்றார். இவர் இத்தேர்தலில் வெற்றிப் பெற்றால் சுவிஸ் நாடாளுமன்றத்தில் இவர் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என பதிவு செய்யப்படுவார்” என தெரிவிக்கப்படுகின்றது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply