தலிபான்களை சந்தித்த இலங்கை பிரதிநிதி: தொடரும் சர்ச்சை

தலிபான்களை சந்தித்த இலங்கை பிரதிநிதி: தொடரும் சர்ச்சை

  • local
  • August 14, 2023
  • No Comment
  • 17

தலிபான் நிர்வாக பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை தவிர்க்குமாறு, வெளிநாடுகளில் உள்ள அனைத்துத் தூதுவர்களுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தலிபான் பிரதிநிதிகளுடன் இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதர் வைஸ் அட்மிரல் கொலம்பகே, சந்திப்பு நடத்தியதும், புகைப்படம் எடுத்துக்கொண்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இலங்கை தாலிபான் நிர்வாகத்தை இன்னும் அங்கீகரிக்காமையே இதற்கான காரணம் என வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் அனுமதி
மேலும், ஐநா இதுவரை தலிபான் நிர்வாகத்தை ஆப்கானிஸ்தானின் சட்டப் பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை எனவும் சார்க் செயலகம் தற்போதைய தலிபான் நிர்வாகத்தை சார்க்கின் மீண்டும் தொடங்கும் கொள்கை மற்றும் தொழில்நுட்ப அளவிலான கூட்டங்களுக்கு அழைக்கவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது

எனினும் இந்த சந்திப்பு குறித்து ஜெயநாத் கொலம்பகே இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தவிர்க்க முடியாத சந்திப்புகளுக்கான தேவை ஏற்பட்டால், கட்டாயம் வெளிவிவகார அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply