இனிமேல் வாட்சை வைத்தே விமானிகளின் சோர்வை அளவிடலாம் – இண்டிகோ நிறுவனம்

இனிமேல் வாட்சை வைத்தே விமானிகளின் சோர்வை அளவிடலாம் – இண்டிகோ நிறுவனம்

இந்தியாவின் நாக்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானி ஒருவர் கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது விமானி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விமானி உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமாக இருந்தாலும், அவர் விமானம் ஓட்டும்போது இந்த நிலை ஏற்பட்டிருந்தால் மற்ற பயணிகளின் நிலையும் என்ன ஆகியிருக்கும்? தங்களின் விமானி மற்றும் பணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது இண்டிகோ நிறுனவம் புதிய வாட்ச்ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், தேல்ஸ் குழுமத்துடன் இணைந்து விமானிகள் அணிவதற்கான புதிய கேட்ஜெட்டை அறிமுகம் செய்துள்ளது.

இது, அவர்களது விமானிகளின் சோர்வு அளவை பகுப்பாய்வு செய்யும் கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச், விமானிகளின் உடல்நலன் மற்றும் விமானத்தின் வழிகள், குழு விவரங்கள் மற்றும் தாங்கள் செல்லும் நாடுகள் பற்றிய விவரங்கள் உள்பட பல விரிவான நுண்ணறிவு வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த வாட்ச் விமானிகளின் சோர்வு அளவுகளைத் தாண்டி நிகழ் நேரத் தரவு, வரலாற்றுத் தகவல்கள் மற்றும் முன் கணிப்பு பகுப்பாய்வு என விமானிகளுக்குத் தேவையான அனைத்து விதத்திலும் உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Related post

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம்…
இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் அம்சங்கள்சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் தரவுகள், வரைமுறையற்று பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள்…
20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

குறிப்பிட்ட நேரம் வரை யூடியூப் வீடீயோவை பார்த்தால் பணம் பெறலாம் என்ற மோசடிகளும், தீங்கிழைக்கக்கூடிய கன்டெட்கள் மற்றும் தவறான தகவல்கள் யூடியூபில் அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களில் ஆன்லைன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *