கொழும்பில் பொலிஸாரை கடுமையாக தாக்கிய பாடசாலை மாணவர்கள்

கொழும்பில் பொலிஸாரை கடுமையாக தாக்கிய பாடசாலை மாணவர்கள்

  • local
  • September 25, 2023
  • No Comment
  • 21

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் 2 பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 5 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் பாறைகளுடன் கூடிய இடங்களில் குடிபோதையில் சிலர் பாதுகாப்பின்றி நீராடுவதாக கல்கிஸ்ஸ பொலிஸார் கடலோர காவல்படை பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பொலிஸார் மீது தாக்குதல்

குறித்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சோதனையின் போது, நீராடுவதற்கு தகுதியற்ற வகையில் பாதுகாப்பற்ற இடத்தில் 06 பேர் அவதானிக்கப்பட்டனர்.

பின்னர், அந்த இடத்தில் குளிப்பது பாதுகாப்பற்றது என்று கூறியதையடுத்து, அவர்களை அங்கிருந்து செல்லுமாறு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன்போது, குறித்த குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியதுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர் கைது

அத்துடன், நிலைமையை கட்டுப்படுத்த மேலும் சில அதிகாரிகள் சென்ற போது, குறித்த குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் 16 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள். கைது செய்யப்பட்ட இரத்மலானை, பிலியந்தலை மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply