பாடசாலை மாணவன் வன்புணர்வு: ஆசிரியருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு

பாடசாலை மாணவன் வன்புணர்வு: ஆசிரியருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு

  • local
  • August 9, 2023
  • No Comment
  • 69

அரச பாடசாலை ஒன்றில் மாணவன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று (07.08.2023) சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதான சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பாடசாலை அதிபரை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான, இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராகச் செயற்பட்டு வந்துள்ள சந்தேக நபர், கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி விளையாட்டு அறையில் வைத்து மாணவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்ததாக தெரிவித்து, ஆகஸ்ட் 2ஆம் திகதி அந்த மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.சரணடைந்த ஆசிரியர்

இந்த நிலையில், தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான ஆசிரியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.08.2023) மாலை தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்த நிலையில், சந்தேக நபரை நிந்தவூர் பொலிஸார் நேற்று (07.08.2023) சம்மாந்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஊடகங்களுக்குப் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply