16 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு: ஓய்வு பெற்ற பொலிஸ் சாஜனுக்கு விளக்கமறியல்

16 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு: ஓய்வு பெற்ற பொலிஸ் சாஜனுக்கு விளக்கமறியல்

  • local
  • August 9, 2023
  • No Comment
  • 23

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் 16 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட ஓய்வு பெற்ற பொலிஸ் சாஜன் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (07.08.2023) உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் சாஜன் சம்பவதினமான கடந்த சனிக்கிழமை பள்ளிவாசல் ஒன்றிற்கு சென்ற சிறுவன்aஒருவனை அப்பகுதியில் வைத்து பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட நிலையில் பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்த நிலையில் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி
ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பொலிஸ் சாஜன் ஏற்கனவே கடமையாற்றி வந்த காலங்களில் சம்பவங்கள் தொடர்பாக வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வந்த நிலையில் அண்மையில் ஓய்வு பெற்றவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட வரை நேற்றைய தினம் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply