சமுர்த்தி உத்தியோகத்தரின் அநாகரிக செயல் -சுற்றிவளைத்து பிடித்தது காவல்துறை

சமுர்த்தி உத்தியோகத்தரின் அநாகரிக செயல் -சுற்றிவளைத்து பிடித்தது காவல்துறை

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 18

குடும்பபெண் ஒருவருக்கு தையல் மெசின் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது காவல்துறை பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது ஆணுறுப்பினை புகைப்படம் எடுத்து வட்ஸ் அப் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணின் கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக அனுப்பி பாலியல் சேட்டை செய்து வந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான முறைப்பாடு ஒன்று காவல்துறையினருக்கு இன்று(7) கிடைக்கப்பெற்றிருந்தது.

காவல்துறையின் துரித நடவடிக்கை
இதற்கமைய சாய்ந்தமருது காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் சாய்ந்தமருது காவல் நிலைய பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐயூப் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரான 41 வயது மதிக்கத்தக்க சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.

பாலியல் இலஞ்சம்

மேலும் சந்தேக நபரான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பல்வேறு திருமணங்கள் மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு கணவன் அற்ற பெண்கள் மற்றும் தனிமையில் உள்ள பெண்களை நாடி தனது இச்சைக்காக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபரை நாளை (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply