கடும் வெப்ப நிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

கடும் வெப்ப நிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

  • local
  • August 24, 2023
  • No Comment
  • 15

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக குமார தெரிவித்துள்ளார். 

 உடலால் உணரப்படும் இந்த வெப்பநிலையை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

 நாடளாவிய ரீதியில் அதிகூடிய வெப்பநிலை திருகோணமலை மாவட்டத்தில் நேற்று முன் தினம் பதிவாகிய நிலையில், அதன் அளவு 37.8 பாகை செல்சியஸாகும். 

மழையில்லாத காலநிலை 

 இதேவேளை, நாடளாவிய ரீதியில் மழையில்லாத காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடைப்பருவ மழை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் வரை நாடு முழுவதும் வறட்சியான காலநிலை நீடிக்கலாம் என திணைக்களம் கூறியுள்ளது.குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெப்ப நிலை

தற்போது, நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்ப நிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply