கனடா வாழ் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

கனடா வாழ் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

  • world
  • October 19, 2023
  • No Comment
  • 18

கனடாவின் ரொறன்ரோ வாழும் இளைஞர்களுக்கு CSI இலத்திரனியல் தொழிநுட்ப இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது.

கனடாவின் தொழில் அமைச்சு, குடிவரவு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு (MLTSD) ஆகியவற்றுடன் இணைந்து இந்த CSI ஸ்காபரோ ஹப் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் இது, இலத்திரனியல் தொழிநுட்ப துறையில் பயிற்சி அளித்து வேலைபாய்ப்புக்குத் தயாராகும் விதத்தில் அதி நவீன நடைமுறைப் பயிற்சியுடனான கல்வித் திட்டம் ஆகும்.

நோக்கங்கள்
இந்த பயிற்சியின் மூலம் சிக்கலான சர்க்யூட் போர்டுகளை எவ்வாறு பொருத்துவது, பழுதைக் கண்டறிவது, சரி பார்ப்பது மற்றும் திருத்துவைத்து பற்றிய அறிவைப் பங்கேற்பாளர்கள் பெறுவார்கள்.

அத்தோடு, குறித்த பயிற்சிக்கான முக்கிய நோக்கங்கள் காணப்படுகின்றன.

முக்கிய நோக்கம்
வேகமாக மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அதை எதிர்கொள்ளக் கூடிய பணியாளர்களை உருவாக்குதல்.
வேலை தேடுபவர்களுக்கு பணி நுழைவுக்கான தடைகள் நீக்க வழி வகுத்தல்
அதிகரித்து வரும் தொழிலாளர் சந்தையின் தேவைகளை சந்திக்க வேலை வழங்குவோருடன் நேரடியாக கூட்டுச் சேர்த்தல்
இந்த CSI வின் இந்த இலத்திரனியல் தொழில்நுட்பப் பயிற்சியானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

விரிவான விபரங்கள்
மேலும், இந்த பயிற்சி 4 மாத பாடத் திட்டமாகும். அதுமட்டுமல்லாமல், அதிநவீன பயிற்சி கூடத்தில் நடைமுறைப் பயிற்சி, வேலைவாய்ப்பு உதவி ஆகியவை வழங்கப்படும்.

மேலே கூறப்பட்ட விடயங்களின் விரிவான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.


https://www.thecsi.com/skills-development-program.html

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply