Rajkiran: `அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்!’ இணையத்தில் வைரலாகும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு

Rajkiran: `அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்!’ இணையத்தில் வைரலாகும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு

  • Cinema
  • August 3, 2023
  • No Comment
  • 123

நடிகர் ராஜ்கிரண் இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், இஸ்லாமிய சமூகத்தின் எதார்த்த குணம் குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்து இருக்கின்றார்.

தமிழ் திரையுலகில் 80 -களின் காலகட்டத்தில் வெற்றி வாகை சூடிய பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ராஜ்கிரண்.

அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்வதை  ராஜ்கிரண் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், இஸ்லாமிய சமூகத்தின் எதார்த்த குணம் குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்து இருக்கின்றார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ராஜ்கிரண்

அவர் வெளியிட்டிருந்த அந்தப்பதிவில், “ இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு  தங்களால் முடிந்த உதவிகளைப் பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல. ‘இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.

இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்’  பொறுமை காக்க வேண்டும் என்று இறைவனின் இறுதி தூதுவர் இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால் பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்.

இந்தப்பொறுமையை தவறாகப்புரிந்து கொண்டு கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால் அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். 

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply