‘அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம்’ – சம்பந்தன் எடுத்த நடவடிக்கை

‘அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம்’ – சம்பந்தன் எடுத்த நடவடிக்கை

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 35
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின் பின்னர் நடத்திய சர்வகட்சி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையிலும், அரசியல் தீர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமை தொடர்பிலும், அதில் மாற்றம் தேவை என்ற அடிப்படையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு தான் எழுதிய கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தக் கடிதம் நேற்று அவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தன்னிடம் உறுதிப்படுத்தினர் என சம்பந்தன் கூறியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போதே இரா. சம்பந்தனால் இந்திய தூதரிடம் இக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு ஸ்தம்பிதம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் தீர்வு விவகாரத்தில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ளது. அதில் உள்ள 13 ஆவது திருத்தம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

இந்திய – இலங்கை ஒப்பந்தமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேவேளை 13ஆவது திருத்தத்தில் உள்ள பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

அரசியல் தீர்வு ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், அதில் கட்டாயம் மாற்றம் தேவை என வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதியிட்டுள்ளேன்” – என்றார்.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply