திருகோணமலையில் மாடு திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

திருகோணமலையில் மாடு திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

  • local
  • August 22, 2023
  • No Comment
  • 51

திருகோணமலை-பாத்தியகம பகுதியில் மாடு ஒன்றினை திருடி மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை  (21.08.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர்.கந்தளாய் -பாத்தியகம பகுதியைச் சேர்ந்தவரின் மாடு காணாமல் போயுள்ளதாக கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இம்முறைப்பாட்டினையடுத்து, இன்னுமொரு நபர் குறித்த மாட்டை வளர்த்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்த போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து குறித்த மாட்டை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மாட்டை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கந்தளாய் – வென்ராசன்புர பகுதியில் வசித்து வரும் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply