வாகன வருமான வரி பத்திரம் தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

வாகன வருமான வரி பத்திரம் தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

  • local
  • August 17, 2023
  • No Comment
  • 16

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தினை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் பரமி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வேறு மாகாணத்தில் உள்ள முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கான வருமான வரி பத்திரத்தை மத்திய மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து திணைக்களத்தின் நோக்கம்
இந்த புதிய கணனி பயன்பாட்டின் மூலம் இலங்கையில் உள்ள முழு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களும் மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட உள்ளன.தற்போது, வாகனம் பதிவு செய்யப்பட்ட மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகத்திலிருந்தும் வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல இலங்கையர்களும் தமது சேவைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொள்வதே மத்திய மாகாண போக்குவரத்து திணைக்களத்தின் நோக்கமாகும் என்றும் மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply