இலங்கையிலுள்ள சூப்பர் மார்கெட்களுக்கு நடைமுறையாகின்ற  புதிய சட்டம்

இலங்கையிலுள்ள சூப்பர் மார்கெட்களுக்கு நடைமுறையாகின்ற புதிய சட்டம்

  • local
  • September 27, 2023
  • No Comment
  • 64

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட்களில் வாடிக்கையாளர் பாதுகாப்பு திட்டங்களும் பயிற்சி திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இப்பயிற்சி அடுத்த வாரம் முதல் ஒன்லைன் முறை மற்றும் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான பயிற்சி மையங்களில் தொடங்கப்பட உள்ளது.

வாடிக்கையாளரை மதித்து அவர்களுக்கு தேவையான சேவையை நிறுவன வளாகத்தில் வழங்க சிறப்பு பயிற்சி தயார் செய்யப்பட்டுள்ளது.

சுப்பர் மார்க்கெட்
கடந்த வெள்ளிக்கிழமை 22ஆம் திகதி பொரளையில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, சுப்பர் மார்க்கெட்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளன.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, பல சுப்பர் மார்க்கெட்டுகள் நிறுவனத்தின் சீருடையில் அல்லது வேறு இடங்களில் பிரச்சினைக்குரிய வகையில் நடந்து கொள்ளும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளன.

விசேட பயிற்சி
பணி புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த விசேட பயிற்சியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுப்பர் மார்க்கெட்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் பல புதிய பயிற்சியாளர்களுக்கும் இந்த விசேட பயிற்சியை வழங்க தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply