முத்தையா முரளிதரனின் 800 திரைப்படம் சிங்கள மொழியிலும் வெளியாகிறது !

முத்தையா முரளிதரனின் 800 திரைப்படம் சிங்கள மொழியிலும் வெளியாகிறது !

நாட்டின் சட்டமொன்று இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்காக திருத்தப்பட்டுள்ளமைக்காக முரளிதரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள், எனக்கு நிறைய உதவினார்கள் என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.

நேற்றைய தினம் (21) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு நன்றி பாராட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “முதலில் என் சகோதரர் அர்ஜுன ரணதுங்கவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும், ஆரம்ப காலத்திலிருந்து என்னை ஒரு தந்தை போல் அவர் கவனித்து கொண்டார்”

அவர் இல்லையென்றால் நான் இங்கு வந்து பேசும் நிலை இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு அணித்தலைவர் கூட அவ்வாறு செயற்படவில்லை, அதை செய்யவும் முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இந்த படத்தை சிங்களத்தில் காட்ட அனுமதித்த அமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நாட்டிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள் மற்றும் எனக்கு நிறைய உதவினார்கள், அவர்கள் இந்த திரைப்படத்தை சிங்கள மொழியில் பார்க்க வேண்டும் என்றும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.  

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply