பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை

  • Cinema
  • September 19, 2023
  • No Comment
  • 33

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல ஹிட் பாடல்களை கொடுத்த பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகராகவும் அசத்தி வருகிறார்.

இவர் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார், இவரது மகள் லாரா, சென்னையில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்றிரவு வழக்கம் போல் தன்னுடைய அறையில் உறங்க சென்றுள்ளார் லாரா, இன்று அதிகாலை 3 மணியளவில் விஜய் ஆண்டனி மகள் அறைக்கு சென்ற போது தூக்கில் தொங்கியுள்ளார்.

உடனடியாக பதறிப்போய் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும், பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக லாரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எனினும் வழக்குபதிவு செய்துள்ள தேனாம்பேட்டை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply