மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ‘Wordpad- ஐ கூடிய விரைவில், நிறுத்தப் போகிறது!? காரணம் என்ன?

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ‘Wordpad- ஐ கூடிய விரைவில், நிறுத்தப் போகிறது!? காரணம் என்ன?

Microsoft- ன் அடுத்த வெளியீட்டில், மைக்ரோசாஃப்ட் வேர்ட்பேட் முற்றிலுமாக நீக்கப்படும்.

முதலில் விளையாட்டிற்காக மைக்ரோசாஃப்ட் பெயின்ட்டில் தொடங்கி இப்பொழுது அலுவலக வேலைகள் அனைத்திலும் அது முக்கிய பங்கினை வகித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ஃப்ட் நிறுவனம் ஒரு திடீர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ‘Microsoft Wordpad’- ஐ கூடிய விரைவில், நிறுத்த போவதாகவும், அடுத்த அப்டேட்டின் போது அதை முற்றிலுமாக எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.

என்னதான் நமக்கு இப்போது வேர்ட்பேட்டை விஞ்சிய பல்வேறு கருவிகள் வந்துவிட்டாலும், நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் அனைத்திற்கும் அடித்தளம் என்று கூறினால் அது வேர்ட்பேட் தான். 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த செயலி, சமீபகாலமாக அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படவில்லை என்பதால் அதை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர். வேர்ட்பேட் கருவியை பயன்படுத்திக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது வேறொரு மாற்றுக் கருவியைத் தேடி பயன்படுத்த வேண்டி இருக்கும்.

வின்டோஸ் 95- இல் இருந்து வேர்ட்பேட் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அடுத்தடுத்த புதிய அப்டேட்கள், மற்றும் புதிய ப்ராசசர்கள் அறிமுகப்படுத்த, வேர்ட்பேட்டின் புழக்கம் மக்கள் மத்தியில் குறையத் தொடங்கியது. மக்கள் அதிகம் புதிதுபுதிதாக வரக்கூடிய நவீன கருவிகளையே பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனால், வேர்ட்பேட் நீக்கப்படுவதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. மைக்ரொசாப்ஃப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “Wordpad இனி புதுபிக்கப்படாது.

மேலும் Microsoft- ன் அடுத்த வெளியீட்டில், மைக்ரோசாஃப்ட் வேர்ட்பேட் முற்றிலுமாக நீக்கப்படும்,” என்று கூறப்பட்டுள்ளது. வின்டொஸ் 7 அறிமுகப்படுத்திய பொழுது வேர்ட் ப்ராசசரில் பெரிதளவில் மாற்றாங்கள் கொண்டு வந்தனர். பிறகு வின்டொஸ் 8- ல் சிறிய புதுப்பிப்பு நடந்தது. இருப்பினும், மக்கள் மத்தியில் இது பெரிதாக வரவேற்கப்படவில்லை. தற்போது வேர்ட்பேட் எப்பொழுது முழுமையாக அகற்றப்படும் என்பதும் தெரியவில்லை. அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் வின்டோஸ் 12- ல் இந்த மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

மேலும், ‘Microsoft Copilot’ என்ற புதிய ‘AI Supporter’, இப்பொழுது மைக்ரோசாஃப்ட்டால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வின்டோஸ் 11 23H2- வில் வரவிருக்கிறது. அடுத்தடுத்து மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தவிருக்கும் அப்டேட்டுகளில், புதிய ‘AI’ கண்டுபிடிப்புகளான ‘Bing AI’ போன்ரவற்றை நாம் எதிர்ப்பார்க்கலாம் என்றும் அந்நிறுவனம் கூறிவருகிறது.

Related post

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம்…
இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் அம்சங்கள்சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் தரவுகள், வரைமுறையற்று பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள்…
20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

குறிப்பிட்ட நேரம் வரை யூடியூப் வீடீயோவை பார்த்தால் பணம் பெறலாம் என்ற மோசடிகளும், தீங்கிழைக்கக்கூடிய கன்டெட்கள் மற்றும் தவறான தகவல்கள் யூடியூபில் அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களில் ஆன்லைன்…

Leave a Reply