8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

  • Sports
  • October 31, 2023
  • No Comment
  • 101

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

சிறந்த வீரர்
கடந்த 1956 முதல் ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ என்ற பிரெஞ்சு கால்பந்து இதழ் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அதில் பலோன் டி’ஆர் (Ballon d’Or) எனும் உயரிய விருது சிறந்த வீரருக்காக அளிக்கப்படுகிறது.

அந்தவகையில் 2023ம் ஆண்டுக்கான விழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில், சிறந்து விளங்கும் வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

மெஸ்ஸி சாதனை
மேலும், இதுவரை பலோன் டி’ஆர் விருதுக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி படைத்துள்ளார். கடந்த ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜெண்டினா அணி வென்றது.

அந்த அணியின் கேப்டனாகவும், சிறந்த வீரராகவும் இருந்து அந்த அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் லியோனல் மெஸ்ஸி. அந்த உலகக்கோப்பையில் அவர் 7 கோல்களை அடித்திருந்தார்.

அத்துடன் 2022-23 தொடரில் பிஎஸ்ஜி கிளப் அணிக்காக 41 போட்டிகளில், 21 கோல்கள் அடித்ததுடன், சக வீரர்கள் 20 கோல்கள் அடிக்க, உறுதுணையாக இருந்துள்ளார். 8வது முறையாக விருதை வென்று சாதனை படைத்த மெஸ்ஸிக்கு உலகம் முழுவதில் இருந்தும் அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related post

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…
வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்’ – தோல்விக்குப் பின் கில்

வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்’ – தோல்விக்குப் பின் கில்

நடப்பு ஐ.பி.எல் சீசனில்குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்ய, லக்னோ அணி மிட்செல் மார்ஷின் சதம் மற்றும் பூரானின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு…

Leave a Reply